Categories
சினிமா தமிழ் சினிமா

“40வது பிறந்தநாளுக்கு சூர்யா கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்”… நடிகர் கார்த்தி ஓபன் டாக்…!!!!!!

தமிழ் சினிமா திரையரங்கில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். 190-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய மகன்களான சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள் கோலிவுட்டில் பாசக்கார அண்ணன் தம்பிகளாகவும் பார்க்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொடுத்திருக்கின்றது. இந்த சூழலில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் கார்த்தி நடித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகர் சூர்யா உங்களுக்கு வழங்கிய மறக்க முடியாத கிப்ட் எது என கேட்டு இருக்கின்றனர். அதற்கு தன்னுடைய 40 வது பிறந்தநாளுக்கு நடிகர் சூர்யா தனக்கு விண்டேஜ் ஜிப்  வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே தனக்கு விண்டேஜ் ஜீப்புகள் மீது ஆர்வம் அதிகம். அதனால் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் ஆக ஜீப் வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். அது அவரிடம் இருந்து பெற்ற ஸ்பெஷல் கிப்ட் என கூறியுள்ளார் கார்த்தி. டீசல் என்ஜினாக இருந்ததை தற்போது ஒரிஜினல் என்ஜினாக மாற்றி வருவதையும் கார்த்தி கூறியுள்ளார். மேலும் திரைப்படத்தில் ஹிட்டானால் ஃபெராரி கார் வாங்கி தருமாறு தனது அண்ணனான சூர்யாவிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளார் கார்த்தி. மேலும் கார்த்திக் கலகலப்பாக பேசும் இந்த வீடியோ கிப்ட் இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

Categories

Tech |