நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திருட வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 30 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் பதுங்கியிருந்த மூர்த்தியை பிடித்து பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.