சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மந்தையில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் சின்ன கணேசன், கண்ணன், குருசாமி, பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டுகள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.