Categories
Uncategorized மாநில செய்திகள்

ஊரடங்கால் 4 மாத மின் கட்டணத்தை ஒரே நுகர்வாக கணக்கிடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பதால் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் 4 மாத மின் கட்டணத்தை ஒரே நுகர்வாக கணக்கிடுவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

வழக்கு விவரம் :

இந்த நிலையில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நான்கு மாத கட்டணத்தை சேர்த்து பில் போடுவதால் 14 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என புகார் அளித்துள்ளார்.

4 மாத நுகர்வை இரண்டு 2 மாதங்களுக்கும் தனித்தனியாக பில் தயாரிக்க மின் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |