Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாண்டஸ்  புயலினால் 5 பேர் உயிரிழந்ததோடு, 98 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. அதன் பிறகு 138 குடிசைகள் மற்றும் 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து 40 விசைப்படகுகள் மற்றும் 24 படகுகள்,‌ 2 பைபர் படகுகள் போன்றவைகளும் புயலினால் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் புயலினால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு சேதமடைந்த வீடுகள் மற்றும் படகுகளுக்கும் முதல்வரின் ஆலோசனைப்படி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் கட்டு மரங்கள் மற்றும் படகுகள் தண்ணீரில் மூழ்கியதால் மீனவர்கள் யாரும் இன்னும் 10 முதல் 20 நாட்களுக்கு கடலுக்கு செல்ல முடியாது என்பதால் அது வரை அவர்களுக்கு 10,000 முதல் 20,000  வரை நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |