இந்தோனேஷிய வனப்பகுதியில் யார் பலசாலி என்ற என்பதை நிரூபிக்க 4 கொமோடோ டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பல்லி இனம் என்றால் அது கொமோடோ டிராகன்கள் தான். ஆம் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் இந்த கொமோடோ பல்லி இனங்கள் இந்தோனேஷிய தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய வகையான ஓன்று. இது சுமார் 10 அடி நீளமும், 80 கிலோ வரை எடையும் கொண்டது. அதேசமயம் இந்த டிராகன்களின் எச்சில், கடுமையான விஷத்தன்மை கொண்டவை. ஆனால் மனிதர்களை அவ்வளவு எளிதில் இது சீண்டாது.
இந்நிலையில் வனத்துறை ஊழியர் ஒருவர் வழக்கம் போல கொமோடோ தேசியப் பூங்காவிற்கு பராமரிப்புப் பணிக்குச் சென்றார். அப்போது அங்கு 2 கொமேடோ டிராகன்கள் மனிதர்களை போல சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அந்த ஊழியர் பார்த்தார். இதையடுத்து அந்த காட்சியை அவர் படம் பிடிக்க ஆரம்பித்தார்.
இரண்டும் சண்டை போட்டு அமைதியான நிலையில், அதன் பின் சாவகாசமாக வந்த வேறு இரு டிராகன்களும் இணைந்து மாறிமாறி கட்டிப்பிடித்து கொண்டு யார் பலசாலி என்பதை நிரூபிக்கும் வகையில் சண்டையிட்டுக் கொண்டன. அதாவது அந்த பல்லிகள் வால்களை மட்டுமீ தரையில் ஊன்றிக் கொண்டு சுமார் 8 அடி உயரத்திற்கு எழும்பி நின்று சண்டையிட்ட காட்சி பார்ப்பதற்கேவிசித்திரமாக இருந்தது. அவை அடிக்கடி இது போன்று யார் பெரியவர் என்பதை நிரூபிக்க சண்டை போடும் என்று வனத்துறை ஊழியர் குறிப்பிட்டார்.
இதோ அந்த வீடியோ
https://youtu.be/mslhVCM0P1M