Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மையம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, இறப்புகள், தகுதியற்ற/ ஒரே பெயரில் 2 அட்டைகள், போலி அட்டைகள் கண்டறிதல் போன்றவை காரணமாக கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 4.28 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகுதான் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தெரிவித்துள்ளது. இதனிடையில் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டைகளை இணைக்காத நிலையில் எந்த ரேஷன் அட்டையும் ரத்து செய்யப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதுவரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் வழங்குவதை மறுக்கக்கூடாது என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |