கொரோனா வைரஸ் தாக்கத்தின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து காலை, மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாலை நேரம் வரை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.