Categories
உலக செய்திகள்

உலகளவில் சிறந்த உணவுக்கலை நிபுணர்கள்…. பட்டியலில் இந்தியர்கள் 4 பேர் தேர்வு…!!!

உலக அளவில் சிறப்பான உணவுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களின் பட்டியலில் இந்தியர்கள் 4 பேர் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இருக்கும் பில்பாவ் என்னும் நகரத்தில் உணவு கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் வருங்காலத்தில் உலக அளவில் உணவு கலையில் சிறப்பான இடத்தை பிடித்து அதன் போக்கையே மாற்றி விடுவார்கள் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வரும் திரவேந்தர் சிங் என்ற நபரும் இடம் பெற்றிருக்கிறா.ர் இந்த போட்டியில் உலகின் 6 கண்டங்களிலிருந்து 400 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் 50 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் இந்தியர் என்பது கூடுதல் சிறப்பு. இவர்கள் வருங்காலத்தில் வித விதமாக புதிய உணவுகளை  கண்டுபிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |