Categories
தேசிய செய்திகள்

நன்கு தூங்கிக்கொண்டிருந்த போது… திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்..!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் தனது குடும்பத்தினருடன் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வீட்டிற்கு குடி போனார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு அறையில் நான்கு பேரும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயம் சுமார் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து 4 பேர் மீதும் விழுந்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்து சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

ஆனால் நால்வரில் மோகன் மட்டுமே உயிரோடு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் கூறுகையில் மோகன் வசித்து வந்த வீடு 45 வருடங்கள் பழமையானது என்றும், அதன் மேற்கூரை பழுதடைந்து இருந்ததாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்து அவற்றை சரி செய்வதற்கான முயற்சியை தொடங்கிய நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |