Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. சிறப்பு முகாம்…. பெயர், பிறந்த தேதி, முகவரி…. சரிபார்க்க அரிய வாய்ப்பு…!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு  வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

அதேபோல புதிய வாக்காளர்கள் படிவம் 6 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் புதிய பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் www.nsvp.in என்ற இணையதளத்தின்  மூலமும் VOTER HELP LINE என்ற அப் மூலமும் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கும் சிறப்பு முகாமில் மாற்றம் செய்யப்படும் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |