Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரவில் நிறுத்திய வாகனம்… உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியை  ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், புருஷோத்தமன், சிவகுமார், ராஜ்குமார். இவர்கள் நான்கு பேரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது நான்கு பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்டு எரிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |