Categories
தேசிய செய்திகள்

வடிவேலுவை மிஞ்சிய சம்பவம்… 4,50,000 டாய்லெட்டை காணோம்… அதிர்ச்சி புகார்..!!

 மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு  வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்  நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு கழிவறைகளை கட்டுவதற்கு ஊராட்சிகள் வழியாகவும் மற்றும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவும் பணத்தை செலுத்தியது. அதில், அதிகாரிகளின் உதவியுடன் இடைத்தரகர்களோ, உள்ளூர் அரசியல் தலைவர்களோ கழிவறையை கட்டிக்கொடுக்காமல் ஊழல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் பல வீடுகளில் உரிமையாளருக்கு தெரியாமலேயே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பக்கத்து வீட்டின் கழிவறைகள் மற்றும்  2012-க்கு முன்னதாக கட்டப்பட்ட கழிவறைகள் ஆகியவற்றை போட்டோ எடுத்து மோசடி நடந்துள்ளதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஊழலில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதை பார்க்கும் போது படத்தில் வடிவேலு, கிணற்றைக் காணோம் சார் என்று அதிகாரியிடம் சொல்வார். அந்த காமெடியைப் போல, மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிவறைகள் காணாமல் போயுள்ளதாக புகார் வந்துள்ளது.

Categories

Tech |