உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,55,400 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,17934 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,31,726 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 21,41,784 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,862 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,820 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 8,50,796 ஆக உயர்ந்துள்ளதுள்ளது. இதுவரை 42,791 பேர்உயிரிழந்துள்ளனர்.