Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 1/2 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பல்”… 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!

நெல்லை மாவட்டம் அருகே நகைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் புதுமனை தெருவில் வசித்து வரும் மைதீன் பிச்சை என்பவருக்கு பஜாரில் நகை கடை ஒன்று உள்ளது. சென்ற 11ஆம் தேதி கடையில் இருந்து 4 1/2 கிலோ தங்கத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்றார்கள். படுகாயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வீரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தார்கள். தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது முதலில் 3 பேர் கைது செய்ய மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் மன்னார்கோவில் சேர்ந்த 20 வயதுடைய மருதுபாண்டி, காக்கா நல்லூரைச் சேர்ந்த 24 வயதுடைய ஐயப்பன், 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவன், இரண்டு இளம் சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது விசாரணை நடத்திய போது இவர்கள் கொள்ளையடித்த நகைகளை டிரம்ஸ் அடிக்கும் கொட்டில் மூலம் ஊருக்கு சென்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 3 கிலோ 100 கிராம் தங்கத்தை மீட்டனர். மீதமிருக்கும் தங்கம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொள்ளையடிக்க கும்பலிடம் இருந்து ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே கொள்ளை கும்பலை கண்டுபிடித்த தனிப்படை போலீஸை பாராட்டுவதாக நெல்லை மாவட்ட சூப்பிரண்டு சரவணன் கூறியுள்ளார்.

Categories

Tech |