சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சொத்தை சிங்கப்பூரிலுள்ள ராஜன் என்பவருக்கு மோகன் விற்பனை செய்ததும் தெரிய வந்திருக்கின்றது. இதனை அடுத்து மோகன் அவரது டிரைவர் கவிக்குமார் சொத்தை வாங்கியதாக தவக்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வைரவநாதன் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசார் மோகன் உள்ளிட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு இரண்டாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் விசாரணையில் இருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் தேவராஜன் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகவில்லை. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தேவராஜன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.