குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் சிறப்பாக சமைத்த அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த வாரம் குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டு சுற்று நடைபெற உள்ளது .
இதில் மதுரை முத்து, தீபா, பவித்ரா, சகிலா, ரித்திகா, தர்ஷா குப்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷகிலா வைல்ட் கார்டு போட்டியில் தேர்வு செய்யப்பட்டு பைனலுக்கு சென்றுள்ளார் . இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.