4-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பச்சேரி பகுதியில் வசித்து வரும் ஆதிமுத்துச்செல்வன் (வயது 43) என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆதிமுத்துச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.