Categories
மாநில செய்திகள்

“4-ம்‌ நாள்‌ நடைப்பயணம்” 1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்திய தொண்டர்கள்….. ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு….!!!!

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் 3250 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு பாதையாத்திரை செல்ல இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். அதன்பின் கேரளாவில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடர இருக்கிறார்.

இன்று ராகுல் காந்தி புலியூர்குறிச்சி பகுதியில் இருந்து அழகிய மண்டபம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் 1000 மீட்டர் நீளமும், 12 மீ அகலமும் உடைய தேசிய கொடியை வைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Categories

Tech |