கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக எடியூரப்பா தெரிவிக்கையில், ”கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அமைச்சராக, நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வாய்ப்பளிக்கவில்லை. எனக்காக அந்த விதியை தளர்த்தி, இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு மோடி- அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4 முறை முதல்வர் ஆகியுள்ள எடியூரப்பா ஒரு முறை கூட தனது ஆட்சியை நிறைவு செய்தது இல்லை. 2006 ஆம் ஆண்டு முதல்வரான 7நாட்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல்வர் எடியூரப்பா மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து ராஜினாமா செய்தார். 2018 ஆம் ஆண்டு மூன்று நாட்களில் ராஜினாமா செய்தார். மீண்டும் 2019ஆம் ஆண்டு முதல்வரான எடியூரப்பாவுக்கு கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ராஜினாமா செய்துள்ளார்.