Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!!!!!!

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் மாமல்லபுரம் கரையை கடந்தது. புயலை முன்னிட்டு நேற்று முதல்  சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |