Categories
மாநில செய்திகள்

4 மணி நேரம் வேலை செய்தால் போதும்…. முழு ஊதியம்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கேற்ற ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதன் முறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வேலை வழங்கப்படுவதுடன் வேலைக்கான ஊதியம் 15 நாட்களுக்குள் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தாலே போதும். அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |