கீர்த்தி சுரேஷ் ‘சாணிக் காயிதம்’ படத்தின் செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் நான்கு நிமிடங்கள் கிளிசரின் இல்லாமல் அழுதுள்ளார் .
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாது பிரபல நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாகவும், வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் . மேலும் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாணிக் காயிதம் படத்தின் செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் 4 நிமிடங்கள் கிளிசரின் இல்லாமலேயே அழுதுள்ளாராம் . அந்த காட்சியை பார்த்து படக்குழுவினர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் கிளிசரின் இல்லாமல் கண்ணீர் வரவழைத்து நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.