Categories
தேசிய செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…..!!!!

மத்தியபிரதேசம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவெனில் அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்து உள்ளது. அதிசய நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கின்றனர்.

இதற்கிடையில் கூடுதலாகவுள்ள அந்த குழந்தையின் 2 கால்கள் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. அத்துடன் கருமுட்டை பிரிதலின் போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்து உள்ளதாகவும், கூடுதலாகவுள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்படும் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

Categories

Tech |