ஆந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் ஜெகன்மோகன், “அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பேன். மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஏற்கனவே பல்வேறு சர்வேக்கள் மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளை தயார் செய்து பெற்றுள்ளேன்.
கட்சி மற்றும் ஆட்சிக்கான குரலை வலுவாக்குவதில் இருக்க வேண்டிய அமைச்சர்கள், துறை ரீதியாகவும் 6 மாதங்களுக்கு மேலாகியும் உரிய பிடிப்பு இல்லாத 4 அமைச்சர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்கூட்டியே கடுமையான முடிவுகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு பிறகு ஆந்திர அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்” என்றார்.