Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய தமிழக மாவட்டங்கள்,  புதுச்சேரி, காரைக்காலில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும்,  சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ( இன்று ) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |