செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகம் முழுவதிலும் டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து அதி வேகமாக பரவிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் அது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகிற நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடவேண்டியதன் அவசியம் குறித்து பேசவேண்டிய கூட்டம் ஒன்றிய அமைச்சர் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
அதில் தமிழகத்தின் சார்பாக நானும் நம் துறையின் செயலாளரும் பங்கேற்று தமிழகத்தின் செய்திருக்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவரங்களை பதிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தின் மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஒரு சிறப்பு மிகுந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர் அலுவலர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்…
அதேபோல் அனைத்து செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் உதவி சுகாதார அலுவலர்கள் என்று ஏராளமான ஹெச்.ஒ.டி என்று சொல்லக்கூடிய அனைத்து அலுவலர்களையும் கூட்டி ஒரு கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் இப்போது எடுக்கப்பட்டிருக்கிறது. எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையுமே ஒரு நான்கு ஐந்து நாட்களுக்குள் செய்து முடிப்பது என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலை பெற்று நம் ஆணையர் அவர்கள் துரித நடவடிக்கையை சென்னையில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.