Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படி அவுட் என்று சொல்லலாம்…. 3 ஆவது நடுவரின் தவறான தீர்ப்பு…. கடும் கோவத்தில் இந்திய ரசிகர்கள்…!!

இங்கிலாந்து-இந்தியாவிற்கு இடையேயான டி20 போட்டியில் 3 வது நடுவர் அவுட் சிக்னல் கொடுத்தால் இந்திய ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

அகமதாபாத்தில் இருக்கும் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி விட்டார். அப்போது சூரியகுமார் தூக்கி அடித்த பந்தை மலான் ஓடிவந்து பிடித்த போதிலும், பந்தானது தரையில் பட்டு விட்டது. இதனையடுத்து அந்த காட்சியை பல்வேறு கோணங்களில் பார்த்த மூன்றாவது நடுவர் தெளிவான கோணம் கிடைக்காத காரணத்தால் கள நடுவர் கொடுத்த சிக்னல் அவுட் என்ற முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 3-வது நடுவர் பந்து மைதானத்தில் பட்ட காட்சி அப்படியே தெரிந்தும் எப்படி அவுட் கொடுத்தார் என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ரஷீத் பிடித்த போது அவரது கால் பவுண்டரி லைனில் பட்டது தெளிவாக தெரிந்த போதும் நடுவர் அவுட் என்று உறுதிப்படுத்தியதால் திரை பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |