பிரான்ஸ் அரசு 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது.
உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு எதிரான இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தி விட்டு, கொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்றாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி வருகிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலும் 60 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவத்துறை 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து 50 வயது நபர்களுக்கும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த அரசு தீர்மானித்திருக்கிறது.