Categories
உலக செய்திகள்

“மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தயாரான நாடுகள்!”.. வெளியான அறிவிப்பு..!!

பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக இருக்கின்றன.

கொரோனாவை ஒழிக்க, உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு  வருகின்றன. பொது மக்கள் முதலில் தயங்கினாலும், அதன் பின்பு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். ஒரு சில நாடுகளில் 3 வயது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

எனவே அங்கு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, 1 வருடம் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று குறிப்பிட்டனர். மேலும், சுவிட்சர்லாந்தில் வரும் 2022-ஆம் வருடம் வரை பூஸ்டர் தடுப்பூசிக்கு அவசியம் இல்லை  என்று தான் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

எனினும், தற்போது வரும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் 65 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி என்று மூன்றாம் தவணை செலுத்தப்படுகிறது. மேலும் ஜெர்மனியிலும் இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் தவணை தடுப்பூசி, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து எளிதில் கொரோனா பரவும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |