Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய மாநில அரசுகளும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளை மத்திய, மாநில முடுக்கி விட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவின் அதிக தாக்கத்தை சந்தித்த ,மாநிலமாக உள்ளது.

அங்கு மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கேரளாவில் 241 பேரும், தமிழ்நாட்டில் 124 பேரும் அடுத்தடுத்து கொரோனா பாதித்த மாநிலமாக இருக்கின்றது. நாடு முழுவதும் 1638 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதில் 133 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த மத்திய அரசு அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்வதாக எண்ணி ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Categories

Tech |