ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மறைமலை நகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் போர்டு ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. எனவே இந்த முடிவு வருத்தமளிக்கிறது. இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும். குஜராத்தில் உள்ள ஆலை இந்த வருடம் இறுதிக்குள்ளும், சென்னையை அடுத்த வருடமும் மூடப்பட உள்ளன.
எனவே இந்த ஆலைகள் மூடப்பட்டால் 8000 பணியாளர்கள் நேரடியாகவும், 30 ஆயிரம் பணியாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள். இது அவருடைய வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும். இரண்டு ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும், அவை சாத்தியமற்றது என்று உறுதியானதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. போர்டு நிறுவனம் வேறு ஏதாவது மகிழுந்து நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால் புதிய நிர்வாகத்தில் இப்போதுள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் வகையில் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.