அமெரிக்காவில் மொத்தமாக சுமார் 37 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் யோகா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச யோகா தினத்தன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் டைம்ஸ் என்ற பிரபலமான சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000 நபர்கள் பங்கேற்று யோகா செய்தனர். அமெரிக்காவில் வாழும் பல நாடுகளை சேர்ந்த மக்களும் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர்.
அதாவது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய வார்த்தை தான் யோகாவாகும். ஒன்றிணைதல் என்பது இதன் பொருளாகும். முதலில் இந்தியாவில் தோன்றிய இந்த பழங்கால வழக்கமானது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
அமெரிக்காவில் சுமார் 37 மில்லியனுக்கு மேற்பட்டோர் வழக்கமாக யோகா செய்து வருகிறார்கள். உலக நாடுகளில் இருக்கும் மக்கள் அனைவரையும் யோகா இணைப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.