சீனத் தலைநகரான பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையில் பீஜிங் மாகாணத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வந்த 8 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது வரை போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் என்று 37 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த மாகாணத்தில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.