காயப்பட்ட அன்னப்பறவையை 37 ஆண்டுகளாக வளர்த்து வந்த துருக்கி நாட்டு நபரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
37 ஆண்டுகளுக்கு முன்பு காயப்பட்டு கிடந்த அன்னப்பறவையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்த துருக்கி நாட்டை சேர்ந்த ரெசெப் மிர்சான் (63).அந்த அன்னப்பறவையை அப்படியே விட்டால் நரிகள் போன்ற விலங்குகள் கொன்று விடக் கூடும் என்ற பயத்தால் அதனை தன்னுடனே வளர்த்து வருகிறார். அதற்க்கு கரிப் என்ற பெயரும் சூட்டியுள்ளார். அந்த அன்னப்பறவை எப்போதும் அவருடனே இருக்கும், அவரை விட்டு எங்கும் பிரிந்து செல்லாது .
மிர்சான் தன் மனைவியை இழந்த பிறகு மாலை நேரங்களில் அன்னப்பறவை கூட வாக்கிங் செல்கிறார். மக்களும் அதனை தினமும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். பொதுவாக அன்னப்பறவைகள் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை தான் வாழும் ஆனால் இந்த அபூர்வ அன்னப்பறவை காப்பாற்றப்பட்டு 37 ஆண்டுகள் ஆகியும் உயிருடன் உள்ளது. கரிப் என்ற இந்த அன்னப் பறவை பறந்து செல்ல வாய்ப்பு கிடைத்தாலும், பிரியாமல் மிர்சானுடனே இருக்கிறது. அதனால் மிர்சான் கரிப்பை தன் சொந்த மகனாகவே பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.