சென்னையில் உள்ள மாதவரம் சின்ன சேக்காடு என்ற பகுதியில் காற்று புகும் வகையில், மக்கும் குப்பைகளை பதனிடும் நிலையம் ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவில் காய்கறி மற்றும் பழக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு, இயற்கை உரமானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், எந்திரங்களின் மூலம்
சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன.
மேலும் அதனை திறந்தவெளியில் வைத்து காய வைக்கின்றனர். இதன் பிறகு, அவற்றை சலித்து உரமாக மாற்றி அமைக்கின்றனர். இதையடுத்து இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற இந்த இயற்கை உரத்தினை, 50 கிலோ மூட்டையாக கட்டி விவசாய பணிகளுக்காக, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் 30 மெட்ரிக் டன் அளவில், இயற்கை உரமானது தமிழ்நாடு கூட்டுறவு இணையத்துக்கு லாரியின் மூலம், நேற்று அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, இதுவரையில் மொத்தம் 367.30 மெட்ரிக் டன் உரமூட்டைகளை, கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இதில் கூறப்பட்டுள்ளது.