தமிழ்நாட்டில் இன்று மட்டும் 363 பேர் குணமடைந்துள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 48.30% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா உறுதியானவர்களில் 429 பேர் ஆண்கள் மற்றும் 330 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மேலும் 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தமாக 9,876 ஆண்களும், 5,631 பெண்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. தற்போது 103 பேர் தொற்று நோய்க்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. 41 அரசு பரிசோதனை மையங்களும், 27 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.