Categories
தேசிய செய்திகள்

36 முறை OTP கேட்டு… ரூ. 10,00,000 அபேஸ்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 36 முறை OTP கேட்டு ரூபாய் 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி OTP அனுப்பி அதில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். மக்களுக்கு இது குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் மாற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இன்று அரங்கேறியுள்ளது.

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்பிஐ வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டியிருப்பதால் செல்போனுக்கு வந்துள்ள OTP ஐ தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இதனை நம்பி அவரும் அந்த நபரிடம் 36 முறை OTP யை தெரிவித்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 10 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. மற்றவர்களிடம் வங்கி தகவல்களை பகிர வேண்டாம்.

Categories

Tech |