திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் நேற்று வரை 948 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 603 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ள நிலையில் 334 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ஆவடியில்14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 984ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.