Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, பாவ்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 பாலங்கள் தகுதியற்றவையாக உள்ளது. இதனையடுத்து தெஹ்ரியில் 8 பாலங்களும், உத்தம் சிங் நகரில் 5 பாலங்களும், ஹரித்துவாரில் மூன்று பாலங்களும், சமோலி, ருத்ர பிரயாக், டோராடூன், பித்தோரகார் போன்ற இடங்களில் தலா ஒரு பாலமும் தகுதியற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை தொடர்ந்து இந்த பாலங்களை சரி செய்ய அல்லது அதற்கு பதிலாக புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி பேசிய போது, பயணிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற பாலங்களை புதிதாக கட்டவோ அல்லது மீண்டும் கட்டமைக்கவோ முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |