தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில தினங்களாகவே மழை கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வைகை அணைக்கு பெரியாறு தேனி முல்லை ஆறு போடி கொட்டக்குடி ஆறு வருஷநாடு மூலவைகை ஆறுகள் ஆகியவற்றின் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்ததால் நீர்திறப்பு சரிந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரத்து 747 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று மழைக்கான சூழல் இருந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 3,545 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் அதிகரிப்பின் காரணமாக வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.