இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி டெல்லியை அடைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியை சேர்ந்த வாலிபர் சுரேஷ் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர் இடத்தில் வரவேண்டும் என்பதற்காக ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரை ஓட்டப்பந்தயம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இளைஞர் சுரேஷ் ராஜஸ்தானில் இருந்து கடந்த மார்ச் 29ஆம் தேதி புறப்பட்டு 350 கிலோமீட்டர் தொலைவு ஓடி இன்று டெல்லியை அடைந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவு அவர் கடந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது தினமும் காலையில் 4 மணிக்கு ஓடத் தொடங்கி காலை 11 மணிக்கு பெட்ரோல் பம்பு ஒன்றை அடைவேன். அதுவும் நிற்காமல் ஓடுவேன். இளைஞர் இடத்தில் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உண்டாக வேண்டும் என்பதற்காக நான் ஓடினேன் என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.