Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா …!!

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969இல் இருந்து 1075ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற  50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 106இல் அதிகபட்சமாக திருப்பூரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 22 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது. 

Categories

Tech |