Categories
உலக செய்திகள்

35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை.. சட்ட நடவடிக்கையில் இறங்கிய பெண்.!!

பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்தவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் தனது சில சொத்துக்களை பெற ஸ்காட்லாந்து பெண்  வழக்கு தொடரவுள்ளார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு இருந்த வீட்டை விற்பனை செய்து கொழும்பில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.

28,77,305 ரூபாய் மதிப்பில் ப்ரியஞ்சனாவிற்காக மினி பேருந்து வாங்கி கொடுத்தார். இதை சேர்த்து மொத்தமாக 92,81,628 ரூபாய் செலவு செய்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு ப்ரியஞ்சனா அவரது நண்பர்  வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ப்ரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவரது நண்பர்கள்தான் அவரை கொன்று விட்டதாக டையன் கூறினார். இதுபற்றி டையன் கூறுகையில், ப்ரியஞ்சனா என் மீதிருந்த காதலால் என்னை திருமணம் செய்யவில்லை என்பதை தாமதமாகவே உணர்ந்தேன்.

பணத்துக்காக தான் என்னை அவர் மணமுடித்தார். எனது குடும்பத்தினர் அறிவுரை கூறியும் நான் கேட்கவில்லை. நான் ப்ரியஞ்சனாவுடன் தங்கிய போது என்னை அவரது குடும்பத்தினர் வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். எல்லா பணத்தையும் இழந்து விட்டு சொந்த நாட்டிற்கு கடனாளியாக தான் திரும்பினேன் என வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் அளித்த பேட்டியில் என் கணவரின் இரண்டு சகோதரர்களும் அவர்களது மனைவிகள் என் வீட்டில் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அங்கு வாழ்வதற்கு தகுதி இல்லை. பல வருடங்கள் உழைத்து அதில் வந்த பணத்தை வைத்து கட்டப்பட்டது எனக் கூறினார். தற்போது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வரும் இவர் தனது சொத்துகளில் சிறிய பங்கேனும் உரிமை கோர முடியும் என நம்புகின்றார். இது சிக்கலானது என்பது எனக்கு தெரிகின்றது. நான் அவர் குடும்பத்திற்காக செலவிட்ட பணத்தில் பாதி கிடைத்தாலும் எனது ஓய்வு காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |