மதுரையில் 35 வது முறையாக நிவாரண உதவி அளித்த பிச்சைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நவீன யுகத்தில் சில பகுதிகளில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது வழக்கம். இந்த நிவாரணத்திற்காக சில தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தவற்றை அரசாங்கத்திற்கு அளிப்பார்கள். அந்த வகையில் சிவகாசி மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பூல்பாண்டியன் என்பவர் தான் இதுவரை பிச்சை எடுத்த பணத்தில் 35 தாவது தடவையாக 10,000 ரூபாயை நிவாரண உதவியாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.
இவர் இதுவரை 34 தடவையும் நிவாரண உதவிக்காக 10,000 ரூபாயை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவரின் இச்செயலைப் பாராட்டி அனைத்து மக்களும் பூல்பாண்டியனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.