உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை 346 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் பரிதாபமாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை சுமார் 346 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 645 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் தெரிவித்த பலி எண்ணிக்கை இறுதியானது இல்லை. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தரவுகள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் உக்ரைன் நாட்டில் இருக்கும் சுமார் 2108 கல்வி நிறுவனங்கள் பாதிப்படைந்திருக்கின்றன.
இதில் 215 கல்வி நிலையங்கள் முழுவதுமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குடும்ப பிரிவினை போன்ற பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக யுனிசெப் குறிப்பிட்டிருக்கிறது.