புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். இதில் 7 பேர் நோட்டீஸ் கொடுத்த பிறகும் விவசாயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.