Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

34 ஆவது இடத்தில் இந்தியா… துப்பாக்கிச்சுடுதலில்…. ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி வென்று அசத்தல்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால் இந்தியா பாராலிம்பிக்கில்  3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது இடத்தில் உள்ளது.

Categories

Tech |