தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 33 சதவீதத்திற்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பல விளைநிலங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் இதற்கான கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.