தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி குலசேகரன்பட்டினம் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது 33 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீசை காரில் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் காரில் இருந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
